மலேசியாவின் 15வது பேரரசராக மாட்சிமை தாங்கிய மாமன்னர் சுல்தான் முகமட் V அரியணை ஏறினார்

மலேசியாவின் 15வது பேரரசராக மாட்சிமை தாங்கிய மாமன்னர் சுல்தான்  முகமட் V அரியணை ஏறினார்

24april02

கோலாலம்பூரில் உள்ள இஸ்தானா நெகாரா எனப்படும் மாமன்னர் மாளிகையில் இன்று 24/04/2017 காலை நடந்த கோலாகலமான விழாவில் மலேசியாவின் 15வது மாமன்னராக மாட்சிமை  பொருந்திய மாமன்னர் சுல்தான் முகமட் V அவர்கள் அரியணை ஏறினார். மாமன்னர் கிளந்தானை சேர்ந்தவராவார். அவருக்கு 42 வயதாகிறது. இவர் மக்களுடன் எளிமையாக பழகக் கூடியவர்.

மன்னராக பொறுப்பேற்றவுடன் அவர் ஆற்றிய ஏற்பு உரையில் “பல இனங்கள், மதங்கள், கலாச்சாரமும், வாழ்க்கை முறைகளும் கொண்டிருந்தாலும் மலேசியர்கள் அனைவரும், சமாதானமாகவும், ஒற்றுமையுடனும் பரஸ்பர மரியாதை கொடுத்தும் வாழ முடியும் என பல காலங்களாக நிரூபித்திருக்கிறோம். இதுதான் நமது பலமும் தனித்துவமும்” என மாமன்னர் கூறினார்.

மேலும் நாளைய தலைவர்கள் இன்றைய இளைஞர்கள் என்றும் அவர்கள் தங்கள் அறிவையும் திறமைகளையும் வளர்த்துக் கொள்ள தொடர்ந்து கற்க வேண்டும் எனவும் தனது உரையில் கூறினார்.

24april01 24april03 24april04

Comments are closed, but trackbacks and pingbacks are open.