பிரதமருடன் சுகாதாரத்துறை அமைச்சரும் மலேசிய குழுவினரும் இந்திய தமிழகம் பயணம்

பிரதமருடன் சுகாதாரத்துறை அமைச்சரும் மலேசிய குழுவினரும் இந்திய தமிழகம் பயணம்

30mar2

மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் இரசாக் தமிழ்நாட்டின் தற்காலிக ஆளுநர் மேதகு வித்யாசாகர், மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர்  எடப்பாடி பழனிசாமி ஆகியோரை மரியாதை நிமித்தம் 30/03/2017 அன்று இந்திய நேரப்படி மாலை 6.45 மணிக்கு சந்தித்துப் பேசினார். அவர்களுடன் மலேசிய சுகாதார அமைச்சரும் ம.இ.காவின் தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் அவர்களும் இதர மலேசியப் பேராளர்களும் கலந்து கொண்டனர். இச்சந்திப்பு வரலாற்றுப் பூர்வமாக அமைந்தது மட்டுமின்றி இரு நாடுகளுக்கிடையிலான உறவை வலுப்படுத்தக்கூடிய சில முக்கிய அம்சங்களும் கலந்துரையாடப்பட்டன. இந்த சந்திப்பில் பிரதமருடன் மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் திரு. P.கமலநாதன், மத்திய இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை இணை அமைச்சர் டத்தோ M.சரவணன் மற்றும் மலேசிய குழுவினரும் கலந்து கொண்டனர்.

அதற்கு முன்னர் 30-03-2017 மலேசிய நேரப்படி மாலை 5.00 மணியளவில் மலேசியப் பிரதமர் மாண்புமிகு நஜீப் துன் ரசாக் அவர்கள் சென்னை ஐ.டி.சி க்ராண்ட் சோழா விடுதிக்கு வந்தடைந்தார்.  முன்னதாகக் காலையில் சென்னைக்குப் பயணித்த மலேசிய சுகாதார அமைச்சரும் ம.இ.கா தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் பிரதமர் அவர்களை மலேசியக் குழுவுடன் இணைந்து வரவேற்றார். பிரதமர் அவர்களையும் டத்தோஸ்ரீ அவர்களையும் சென்னை வாழ் மக்கள் மிகுந்த ஆரவாரத்துடன் வரவேற்றனர். குறிப்பாக, சோழா தங்கும் விடுதி வந்தடையும் வழி முழுக்க மலேசியப் பிரதமர், டத்தோஸ்ரீ அவர்களின் வருகையை முன்னிட்டு பதாகைகள் ஒட்டப்பட்டு விமரிசையாகக் காட்சியளித்தது.

 30mar1 30mar3 30mar4 30mar5 30mar6 30mar7

Comments are closed, but trackbacks and pingbacks are open.