டி.எச்.ஆர் ராகாவின் தீபாவளி சிறப்பு படைப்புகள்

14october_thrraaga_12

தீபாவளித் திருநாளை முன்னிட்டு மலேசியாவின் முதன்மை நிலை தமிழ் வானொலி டி.எச்.ஆர் ராகா இவ்வாண்டும் தங்களுடைய ரசிகர்களுக்காகச் சிறப்பு படைப்புகளைக் கொண்டு வரவுள்ளது.

டி.எச்.ஆர் ராகாவின் A&A தீபாவளி கொண்டாட்டம் கலைநிகழ்ச்சி

கடந்த செப்டம்பர் 21-ஆம் தேதி தொடங்கி 24-ஆம் தேதி வரை, 4 நாட்களுக்கு ஜிஎம் கிள்ளான் வோல்சேல் சிட்டியில் அஸ்ட்ரோவின் அனைத்துலக இந்திய வர்த்தக விழா மற்றும் தீபாவளி கொண்டாட்டம் 2017, டிஎச்ஆர் ராகாவின் “டி.எச்.ஆர் ராகாவின் A&A தீபாவளி கொண்டாட்டம்” நிகழ்ச்சியுடன் மிகப் பிரம்மாண்டமான முறையில் முடிவுற்றது. இந்நிகழ்ச்சி அக்டோபர் 18-ஆம் தேதி மாலை 6-மணிக்கு அஸ்ட்ரோ வானவில் ஒளியேறவுள்ளது.

டிஎச்ஆர் ராகாவின் அறிவிப்பாளர்களான ஆனந்தா, உதயா, ராம், ரேவதி, சுரேஷ், கவிமாறன், கீதா, அகிலா, ஷாலு, ஜெய், யாசினி ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இடைவிடாத ஆடல் பாடல் என பல அற்புதமான படைப்புகள் படைத்துள்ளார்கள்.

அதை வேளையில் டி.எச்.ஆர் ராகாவின் அறிவிப்பாளர்களுடன் இணைந்து அண்மையில் நடைபெற்ற ராகாவின் ஸ்டார் போட்டியின் இறுதிச்சுற்றின் போட்டியாளர்களான அருள்வேந்தன், நிமலன், சபேஷ் மற்றும் திவேஸ் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்களுடைய அசத்தலான படைப்புகளை வழங்கினர்.

#தீபாவளிவந்தாச்சு குறுநாடகம்

ரசிகர்கள்  டி.எச்.ஆர் ராகாவின் முகநூல் மற்றும் யூடியுப்  பக்கங்களை வலம் வருவது மூலம், தீபாவளிக்குச் செய்யைக்கூடிய செய்யக்கூடாத விஷயங்களை மையபடுத்திய 10 அத்தியாயங்களைக் கொண்டு  குறுநாடகத்தைக் கண்டு மகிழலாம். இந்த தொடர்களில் கலக்கல் காலை அறிவிப்பாளர்கள் ஆனந்தா மற்றும் உதயா படைப்புகளைக் காணலாம்.

 

ராகாவின் தீபாவளி பாடல்

இந்தத் திருநாளை மேலும் குதூகலமாகக் கொண்டாட டி.எச்.ஆர் ராகா இவ்வாண்டும் ஒரு புதிய தீபாவளி பாடலைத் தயாரித்துள்ளார்கள். இசையமைப்பாளர் லாரன்ஸ் சூசை இசையில் வெளிவந்துள்ள இப்பாடலை டி.எச்.ஆர் ராகாவின் அறிவிப்பாளர்கள் பாடியுள்ளார்கள்.

அதுமட்டுமின்றி, இப்பொன்னாளில் இயலாதவர்களுக்கு உதவும் நோக்கில் கலக்கல் காலை அறிவிப்பாளர்கள் உதயா மற்றும் ஆனந்தா நேயர்களின் ஆதரவுடன் உதவுள்ளார்கள். அந்த வகையில் நேயர்கள் வழங்கும் சவால்களை ஆனந்தா மற்றும் உதயா வெற்றிக்கரமாக செய்து முடித்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆதரவற்ற இல்லங்களுக்குத் தேவையான பொருட்களைப் பெறுவார்கள்.  இச்சவால்களில் வாயிலாக கிடைக்கப் பெறும் பொருட்கள் கூலா சிலாங்கூரில் அமைந்துள்ள முதியோர் இல்லம் மற்றும் செத்திய ஆலாம் ஆதரவற்ற இல்லத்திற்கும் வழங்கப்படும்.

மேல் விவரங்களுக்கு raaga.fmஅகப்பக்கத்தை அல்லது டி.எச்.ஆர். ராகாவின் முகநூலை வலம் வருங்கள்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.