சிலாங்கூர் மாநில இந்திய தொழில் முனைவோர் இரண்டு நாள் வர்த்தக கண்காட்சி நிறைவு பெற்றது

சிலாங்கூர் மாநில இந்திய தொழில் முனைவோர் இரண்டு நாள் வர்த்தக கண்காட்சி நிறைவு பெற்றது

27mar1 சிலாங்கூர் ரத்னாஸ் சமூக பொது நல இயக்கம் ஏற்பாட்டில் சிலாங்கூர் மாநில இந்திய தொழில் முனைவோர் இரண்டு நாள் வர்த்தக கண்காட்சி மற்றும் விற்பனை கடந்த இரண்டு தினங்கள் 25-03-2017 மற்றும் 26-03-2017 ரவாங் தேசிய பள்ளி திடலில் நடைபெற்றது. 25-03-2017 அன்று நடந்த துவக்க விழாவில் ம.இ.கா தேசிய இளைஞர் பிரிவு தலைவர் திரு. சிவராஜ் சந்திரன் கலந்து கொண்டார். இந்த வர்த்தக கண்காட்சியில் சிலாங்கூர் பகுதியை சார்ந்த சுமார் 100 வர்த்தகர்களும் நிறுவனங்களும் மிகுந்த ஆர்வமுடன் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். பல்வேறு வகையான பொருட்கள் மற்றும் சேவைகளை தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அரங்குகளில் காட்சி படுத்தியிருந்தனர். விற்பனையும் நடைபெற்றது. கண்காட்சியின் சிறப்பு நிகழ்ச்சியாக மலேசிய கலை உலகத்தின் ஏற்பாட்டில் 26-03-2017 அன்று நடைபெற்ற திறன் போட்டிகள் அமைந்தன. இந்த போட்டிகளில் பங்கு பெற்றவர்கள் தங்களின் பல்வேறு திறன்களை வெளிப்படுத்தினர். நடனம், பாட்டு, பல்குரல் திறன் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. வெற்றி பெற்றவர்களுக்கு பல பரிசுகள் வழங்கப்பட்டன. 26-03-2017 அன்று மாலை வர்த்தக கண்காட்சியின் நிறைவு விழா நடைபெற்றது. விழாவில் மத்திய சுகாதாரத்துறை  அமைச்சரும் ம.இ.கா தேசிய தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் கலந்து கொண்டு இந்திய வர்த்தகர்களை ஊக்குவித்து பேசினார். விழாவில் செலாயாங் தொகுதி ம.இ.கா தலைவர் திரு. எம்.பி. ராஜா, உலுசிலாங்கூர் தொகுதி ம.இ.கா தலைவர் திரு.பாலா, டத்தோ கீதாஞ்சலி  மற்றும் அரசு சாரா அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர். 27mar2 27mar3 27mar427mar527mar627mar727mar8

Comments are closed, but trackbacks and pingbacks are open.