கால்பந்து போட்டிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்ற அணிகள் – சுக்கிம் 4 2017

கால்பந்து போட்டிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்ற அணிகள் - சுக்கிம் 4 2017

08sukim_fbfinalstandings

சுக்கிம் 4 2017 ஜூலை 04 ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது.

16 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்து போட்டிகள் அணிகள் இரண்டாக பிரித்து கடந்த 4 நாட்கள் நடந்தன. ஆரம்ப சுற்று போட்டிகள் இன்றுடன் முடிந்தன. நடந்த போட்டிகளின் புள்ளிகள் அடிப்படையில் இறுதி பட்டியல் முடிவானது. இந்த போட்டிகளின் முடிவுகளை பொறுத்து முதல் நான்கு அணிகள் அரை இறுதி போட்டியில் நாளை 08/07/2017 அன்று மோதுகின்றன. இதன் அடிப்படையில் அரை இறுதிக்கு சிலாங்கூர், ஜோகூர், பேராக் மற்றும் கூட்டரசு பிரதேச அணிகள் தகுதி பெற்றுள்ளன.

16 வயதுக்குட்பட்டோருக்கான கால் பந்து போட்டி முதல் அரை இறுதிப் போட்டி ஆட்டம் காலை 08.15 மணிக்கு சிலாங்கூர் மற்றும் ஜோகூர் அணிகளுக்கு இடையே மைதானம் B இல் நடைபெறும்.  இது போட்டி எண் 26 ஆகும்

16 வயதுக்குட்பட்டோருக்கான கால் பந்து போட்டி இரண்டாவது அரை இறுதி போட்டி காலை 09.30 மணிக்கு கூட்டரசு பிரதேசம்  மற்றும்  பேராக் அணிகளுக்கு இடையே மைதானம் B இல் நடைபெறும்.

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.