இவ்வாண்டு தீபாவளிக்கு உள்ளூர் மற்றும் அனைத்துலக நிகழ்ச்சிகளைக் கொண்டு வருகின்றது ஆஸ்ட்ரோ

இவ்வாண்டு தீபாவளிக்கு உள்ளூர் மற்றும் அனைத்துலக நிகழ்ச்சிகளைக்  கொண்டு வருகின்றது ஆஸ்ட்ரோ

13october_astrokt4_1678_preview

இவ்வாண்டு தீபாவளிக்கு ஆஸ்ட்ரோ சந்தாதரர்கள் பல வகையான நிகழ்ச்சிகளைத் தங்களுடைய குடும்பத்தினர்களுடனும் நண்பர்களுடனும் இணைந்து ஆஸ்ட்ரோ கோ மற்றும் NJOI Nowஉட்பட அனைத்து திரைகளிலும் கண்டு மகிழலாம். ஆஸ்ட்ரோ வானவில்,ஆஸ்ட்ரோ வெள்ளித்திரை, ஆஸ்ட்ரோ விண்மீன் எச்.டி, போலிஒன் எச்.டி, தாரா எச்.டி, ஆஸ்ட்ரோ தங்கத்திரை மற்றும் டி.எச்.ஆர் ராகாவின் சமூக வளத்தளங்களில் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள் வலம் வரவுள்ளது.

அண்மையில் 4 நாட்களுக்கு நடைபெற்ற அனைத்துலக இந்திய வர்த்தக விழாவின் சிறப்பு காட்சி தொகுப்புகளுடன் நடிகை ராய் லஷ்மி, பிண்ணனிப் பாடகர் சாதனா சர்கம், ஹரிணி மற்றும் நம் நாட்டின் கலைஞர்கள் கலந்து கொண்ட தீபாவளி கொண்டாட்டம் நிகழ்ச்சியுடன் நம்முடைய உள்ளூர் தயாரிப்பான வினை, தீபாவளி த்ரிகர், இருவர் என இந்த தீபாவளிக்கு ஆஸ்ட்ரோ வானவில் அலைவரிசை 201-இல் பிரத்தியேகமாக ஒளியேறவிருக்கிறது.

ஆஸ்ட்ரோ வெள்ளித்திரையில் அலைவரிசை 202-இல் நடிகர் விஜய் மற்றும் சமந்தா நடிப்பில் வெளிவந்த கத்தி, சூர்யா நடிப்பில் சிங்கம் 3 மற்றும் சீனு இராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, தமன்னா நடித்த தர்மதுரை போன்ற திரைப்படங்களைக் கண்டுக் களிக்கலாம்.

ஆஸ்ட்ரோ எச்.டி வாடிக்கையாளர்களுக்குத் துல்லிய ஒளிப்பரப்பில் பவர் பாண்டி, பண்டிகை, காற்று வெளியிடை, சங்கிலி புங்கிலி கதவ தெற திரைப்படங்களுடன் ஆஸ்ட்ரோ மற்றும் உள்ளூர் தயாரிப்பில் வெளிவந்த பெட்டிக்குளே என்ன?, எனக்கேவா?, ஸ்மாட் வீல், பவளமல்லியும் தங்க முறுக்கும் போன்ற நிகழ்ச்சிகள் ஆஸ்ட்ரோ விண்மீன் எச்.டி அலைவரிசை 231-இல் வலம் வருகின்றன.

மேலும், பாலிவூட் ரசிகர்களுக்கு தாரா எச்.டி அலைவரிசை 108 -இல் ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் வெளிவந்த காபில், சுபாஷ்காய் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராய், அணில் கபூர் நடித்த தால்மற்றும் ஆஸ்ட்ரோ போலிஒன் எச்.டி அலைவரிசை 251-இல் அண்மையில் வெளிவந்த ஹல்ப் கேர்ள்பிரண்ட் போன்ற போன்ற திரைப்படங்கள் ஒளியேறவுள்ளது.

ஆஸ்ட்ரோ தங்கத்திரையில் அண்மையில் திரைக்கு வந்த ரங்கூன், ரூபாய் மற்றும் ஒரு கீடாயின் கருணை மனு திரைப்படங்களை அலைவரிசை 241-இல் காணலாம். அதுமட்டுமின்றி, ஆன் டிமாண்ட் சந்தாதரர்கள் விக்ரம் வேதா, இருமுகன், தெறி போன்ற திரைப்படங்களைக் கண்டு மகிழலாம்.

இந்தத் திருநாளை மேலும் குதூகலமாகக் கொண்டாட .நம் நாட்டின் முதன்மை நிலை தமிழ் வானொலி நிலையம் டி.எச்.ஆர் ராகா இவ்வாண்டும் ஒரு புதிய தீபாவளி பாடலைத் தயாரித்துள்ளார்கள். இசையமைப்பாளர் லாரன்ஸ் சூசை இசையில் வெளிவந்துள்ள இப்பாடலை டி.எச்.ஆர் ராகாவின் அறிவிப்பாளர்கள் பாடியுள்ளார்கள்.

அதுமட்டுமின்றி, இப்பொன்னாளில் இயலாதவர்களுக்கு உதவும் நோக்கில் கலக்கல் காலை அறிவிப்பாளர்கள் உதயா மற்றும் ஆனந்தா நேயர்களின் ஆதரவுடன் உதவயுள்ளார்கள். அந்த வகையில் நேயர்கள் வழங்கும் சவால்களை ஆனந்தா மற்றும் உதயா வெற்றிக்கரமாக செய்து முடித்தால் தேர்தெடுக்கப்பட்ட ஆதரவற்ற இல்லங்களுக்குத் தேவையான பொருட்களைப் பெறுவார்கள்.  இச்சவால்களில் வாயிலாக கிடைக்கப் பெறும் பொருட்கள் கூலா சிலாங்கூரில் அமைந்துள்ள முதியோர் இல்லம் மற்றும் செத்திய ஆலாம் ஆதரவற்ற இல்லத்திற்கும் வழங்கப்படும்.

அதை வேளையில், டி.எச்.ஆர் ராகா சமூக வளத்தளங்களில் தீபாவளியை முன்னிட்டு 10 அத்தியாயங்களை உள்ளடக்கிய காணொளிகள் இரசிகர்கள் கண்டுக் களிக்கலாம்.

ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் தீபாவளியன்று தங்களுடைய விருப்ப நிகழ்ச்சிகளை ஆஸ்ட்ரோ கோ மற்றும் NJOI Now செயலிகளின் வாயிலாகக் கண்டு மகிழலாம். இப்பொழுதே ஆஸ்ட்ரோ கோ மற்றும் NJOI Now செயலியைப் பதிவிறக்கம் செய்யலாம்.

13october_astrokt4_1561_preview

Comments are closed, but trackbacks and pingbacks are open.